நிரந்தரம் அல்ல...
UPDATED : மார் 15, 2024 | ADDED : மார் 15, 2024
விக்டோரியா மகாராணி மரணப் படுக்கையில் இருக்கும் போது கனவான்களும், சீமாட்டிகளும் தன்னை சுற்றி நிற்பதைக் கண்டார். ஆனால் அவர்களால் என்ன பயன்? கண் இமைக்கும் நேரத்திற்குள் ராணியின் உயிர் அடங்கியது. தனக்கே உரிமையான அரண்மனை, உறவுகள், உடைமைகள் என எல்லாம் அவரை விட்டு நீங்கின. இந்த ராணியைப் போல உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒருநாள் விடை பெறப் போகிறோம். எதுவும் நம்முடன் வரப் போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்தால் 'நான்' என்னும் அகந்தை அழியும். 'வீடு, மனை, வாசல் எதுவும் நிரந்தரமல்ல; சில காலம் மட்டுமே அதனுடன் பயணிக்கிறோம்' என்கிறது தேவமொழி.