திக்.. திக்..
UPDATED : ஏப் 18, 2024 | ADDED : ஏப் 18, 2024
நேர்காணலுக்கு வந்தவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டன. அவர்களிடம் ' ஐந்து நிமிடத்திற்குள் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்' என்றார் கண்காணிப்பாளர். அதைக் கேட்ட அனைவருக்கும் திக்.. திக்.. என்றிருந்தது. ஒவ்வொருவரும் ஒரு சில கேள்விகளுக்கு விடையளித்தனர், அவர்களில் ஒரு சிலர் இன்னும் நேரம் கொடுத்திருந்தால் முழுமையாக விடை அளித்திருப்போம் என்றனர். ஆனால் ஒருவர் மட்டும் கேள்விக்கு விடை அளிக்கவில்லை. அவரே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட்டது. புருவத்தை உயர்த்தியவர்களிடம், பத்தாவது கேள்வியை படியுங்கள் என்றார் கண்காணிப்பாளர். அதில் ஒன்பது கேள்விக்கும் விடையளிக்க வேண்டாம் என்று இருந்தது. ஒரு நிமிடம் ஒழுங்காக நீங்கள் படித்திருந்தால் வெற்றி பெற்று இருப்பீர்களே என்றார்.வேகத்தை விட விவேகமே முக்கியம்.