உள்ளூர் செய்திகள்

திருப்தியுடன் வாழுங்கள்

வில்லியம் என்பவரின் சட்டைப் பையிலிருந்த பணத்தை திருடிவிட்டனர். இந்த இழப்பைக் குறித்து நண்பர்கள் விசாரித்தனர். அப்போது வில்லியம், ''கண்ணியமான திருடன் அவன். என்னை அடித்து உதைக்காமல் திருடியுள்ளான். அதனால் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன்'' என்றார். இழந்ததை எண்ணி வருத்தப்படாமல், இருப்பதை எண்ணி திருப்தியுடன் வாழுங்கள். எந்நிலையிலும் மனநிறைவுடன் வாழுங்கள்.