குரங்கும் பூனையும்
UPDATED : செப் 10, 2023 | ADDED : செப் 10, 2023
குரங்கு குட்டிகள் தன் தாயை கெட்டியாக பிடித்துக் கொள்ளும். மரம், மலையின் மீது அங்கும் இங்கும் தாய் தாவினாலும் குட்டியைப் பற்றி அது கவலைப்படாது. தாய்ப்பூனை தன் குட்டிகளை வாயால் கவ்வி பாதுகாப்பாக வேறிடத்திற்கு எடுத்துச் செல்லும். குரங்கு பிடியாக பக்தி செலுத்தினால், பூனைக்குட்டிகளை பாதுகாக்கும் தாயாக ஆண்டவர் இருப்பார். 'உம்மை பரிபூரணமாக பற்றிக் கொண்டவருக்கு நீரே எல்லாம்' என்கிறது பைபிள்.