உள்ளூர் செய்திகள்

இதற்கு இணை இது தான்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தேவ செய்தியாளர் ஹோராட்டியாஸ், சிறந்த பாடல்களை இயற்றுவார். ஒருமுறை அவர் ஒரு செய்தியைச் சொன்னார்.ஒரு மனிதன் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு பதிலாக மிகச்சிறந்த புதிய மார்க்கத்தை உருவாக்க பிரயாசை செய்தான். ஆனால், அவனது முயற்சி சற்றும் பலனளிக்கவில்லை. தொடக்கத்தில் அவனது கருத்தை ஏற்ற சிலரும் கூட ஆர்வமின்றி பின்வாங்கி விட்டனர். சோர்ந்து போன அந்த மனிதன், பிரான்ஸ் நாட்டின் அரசியல்மேதையான டாலிரன்டைச் சந்தித்து ஆலோசனை கேட்டான். ''கிறிஸ்தவ மார்க்கத்திற்கு இணையான ஒரு மார்க்கம் உருவாக்கப்பட வேண்டு மானால், முதலில் நீ போய் சிலுவையில் அறையப்படு. மூன்றாவது நாள் கல்லறையை விட்டு உயிரோடு எழுந்து வா. அப்படியானால், ஒருவேளை உன் முயற்சி வெற்றி பெறலாம்,'' என்றார். ஆலோசனை கேட்க வந்தவனுக்கு எப்படி இருந்திருக்கும் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.