உள்ளூர் செய்திகள்

எது அழகு

அழகான பூக்களில் மணம் இல்லை. மணமுள்ள பூக்களையே பட்டாம்பூச்சி, வண்டுகள் விரும்பும். அதுபோல நல்லகுணம் கொண்டவர்களை ஆண்டவர் விரும்புவார்' என பாதிரியார் ஜேம்ஸ் கூட்டத்தில் பேசினார். அதைக்கேட்ட சிறுவன் ஒருவன், 'என்னையும் விரும்புவாரா' எனக் கேட்டான். அதற்கு அவர், 'பெற்றோருக்கு கீழ்படி. ஆசிரியருக்கு மரியாதை கொடு. உன் வேலையை நீயே செய். பிறருக்கு உதவு. இதை செய்தாலே போதும் உன்னையும் விரும்புவார்' என்றார் பாதிரியார்.