நீயும் நானும் ஒன்றே!
UPDATED : செப் 19, 2023 | ADDED : செப் 19, 2023
ஜோசப், ஜோல் இருவரும் பள்ளிக்கூட நண்பர்கள். படித்து முடித்த பின் ஜோசப் ஆசிரியர் பணியிலும், ஜோல் துப்புரவு பணியிலும் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோசப்பை சந்தித்த ஜோல் தானும் உயர்கல்வி பெற வில்லையே என வருந்தினார். 'நண்பா... வருந்தாதே வீதிகளில் கிடக்கும் குப்பைகளை நீ அகற்றுகிறாய். மாணவர்களின் மனதில் இருக்கும் குப்பைகளை நான் அகற்றுகிறேன். நீயும் நானும் ஒன்றே' என்றான் ஜோசப்.