விரும்பியது கிடைக்க...
அபிராமி அந்தாதியில் குறிப்பிட்ட பாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இதை தினமும் படித்தால் விரும்பியது கிடைக்கும். வளமான வாழ்வுக்கு தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. பயம் தீர... வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே. லட்சியம் வெல்ல... கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே. ஆடை, ஆபரணம் சேர... கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட, அரவின் பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும், எட்டுத் திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே. ஒழுக்கமுடன் வாழ... வாள்நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டி பேதை நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே. உடல்நலம் பெற... மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே. புகழ் கிடைக்க... நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமனை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்ற ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. நல்ல நட்புக்கு... உறைகின்ற நின் திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே.