இந்த வாரம் என்ன
அக்.4 புரட்டாசி 18: சந்திர தரிசனம். தனவிருத்தி கவுரி விரதம். திருப்பதி ஏழுமலையப்பன், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள், ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப்பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். அக்.5 புரட்டாசி 19: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலம். வள்ளலார் பிறந்த நாள். அக்.6 புரட்டாசி 20: சதுர்த்தி விரதம். திருப்பதி ஏழுமலையப்பன் சிம்ம வாகனம். திருமலை நம்பி திருநட்சத்திரம். அக்.7 புரட்டாசி 21: திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு அலங்காரம். அக்.8 புரட்டாசி 22: சஷ்டி, உபாங்க லலிதா கவுரி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி நவராத்திரி அலங்காரம். அக்.9 புரட்டாசி 23: சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம். அகோபிலமடம் 20வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். அக்.10 புரட்டாசி 24: துர்காஷ்டமி. சதாபிஷேக ஸ்நானம். ஒப்பிலியப்பன் கோயில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம். கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.