உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

பிப்.14 மாசி 2: சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம். பிப்.15 மாசி 3: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வரதராஜர், ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவர் திருமஞ்சனம். திருவள்ளுவர் நாயனார் குருபூஜை. பிப்.16 மாசி 4: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி. எறிபத்த நாயனார் குருபூஜை. செடி, கொடிகள் வைக்க நல்ல நாள். பிப்.17 மாசி 5: முகூர்த்த நாள். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். பிப்.18 மாசி 6: சஷ்டி விரதம். கோயம்புத்துார் கோனியம்மன் பூச்சாற்று விழா. ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் பவனி. சுவாமிமலை முருகனுக்கு தங்க பூமாலை சூடியருளல். பிப்.19 மாசி 7: ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிேஷகம். உ.வே.சா., பிறந்த நாள். பிப்.20 மாசி 8: திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு. யோகிராம் சுரத்குமார் நினைவுநாள்.