உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

அக்.31 ஐப்பசி 14: முகூர்த்த நாள். அழகர்கோவில் கள்ளழகர் தைலக்காப்பு உற்ஸவம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வேதவல்லித்தாயார் திருமஞ்சனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கு. பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்.நவ.1 ஐப்பசி 15: ஏகாதசி விரதம். உத்தான ஏகாதசி. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் ஊஞ்சல். திருச்சி ஸ்ரீரங்கம்நம்பெருமாள் திருமஞ்சனம். மதுரை கூடலழகர் புறப்பாடு. பேயாழ்வார் திருநட்சத்திரம். 1040வது ராஜராஜ சோழன் சதயவிழா. நவ.2 ஐப்பசி 16: சிலுகத்துவாதசி. ஷீராப்தி பூஜை. அழகர்கோவில் கள்ளழகர் நுாபுர கங்கைக்கு எழுந்தருளல். உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு. நவ.3 ஐப்பசி 17: முகூர்த்த நாள். பிரதோஷம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல். சாலிசந்தை கருணாயானந்த சுவாமிகள் குருபூஜை. நவ.4 ஐப்பசி 18: பிருந்தாவன பூஜை. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உற்ஸவம் ஆரம்பம். தேவகோட்டை ரங்கநாதர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. சுவாமிமலை முருகன் தங்க பூமாலை சூடியருளல். திருமூலர் குருபூஜை. நவ.5 ஐப்பசி 19: கார்த்திக கவுரி, துளசி விரதம். லட்சுமி பூஜை. பவுர்ணமி. தஞ்சைப் பெரியகோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம். குருநானக் ஜெயந்தி. சாதுர்மாஸ்ய விரதம் முடிவு. நெடுமாற நாயனார் குருபூஜை. திருநெல்வேலி காந்திமதி, கோவில்பட்டி செண்பகவல்லி, தென்காசி உலகம்மை, சங்கரன்கோவில் கோமதி, துாத்துக்குடி பாகம்பிரியாள், வீரவநல்லுார் மரகதாம்பிகை, பத்தமடை மீனாட்சி அம்மன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். நவ.6 ஐப்பசி 20: கார்த்திகை விரதம். இடங்கழி நாயனார் குருபூஜை. திருப்பரங்குன்றம் முருகன் தங்க மயில் வாகனம். கரிநாள்.