கேளுங்க சொல்கிறோம்
க.கைலாசம், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.*தங்க மெட்டியை அணியலாமா?தங்கம் மகாலட்சுமியின் அம்சம். அதை நம் காலில் அணிவது தவறல்லவா... தி.அம்பலவாணன், சிதம்பரம், கடலுார்.*நேருக்கு நேர் நின்று சுவாமியை தரிசிக்கலாமா... சுவாமியின் கடைக்கண் பார்வை அருள் நிறைந்தது. எனவே பக்கவாட்டில் நின்று தரிசியுங்கள். ச.அர்ஜூன், கால்காஜி, டில்லி.*வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா?துர்கைக்கு எலுமிச்சை தீபம், பைரவருக்கு மிளகு தீபத்தை கோயிலில் மட்டும் ஏற்ற வேண்டும். வே.முருகன், உத்தமபாளையம், தேனி.*வீட்டில் இருக்க வேண்டிய படங்கள் என்ன?குலதெய்வம், இஷ்ட தெய்வம் அவசியம். மற்றவை உங்கள் விருப்பம்.க.திவ்யபாரதி, முத்தலாப்பேட்டை, புதுச்சேரி. *கடவுளுக்கு பழைய சாதம் படைக்கலாமா?படைக்கக் கூடாது. அதைச் சாப்பிடும் முன் கடவுளை வணங்குங்கள். கு.பொன்னர்சங்கர், சிங்காநல்லுார், கோயம்புத்துார்.*காய்ச்சிய எண்ணெய்யை விளக்கிற்கு பயன்படுத்தலாமா?சுவாமி சம்பந்தப்பட்ட எதற்கும் காய்ச்சிய எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது. மு.பார்வதி, வாசுதேவநல்லுார், தென்காசி.*கூரைப்புடவை, கோடிப்புடவை இரண்டும் ஒன்றா?தாலி கட்டும் போது உடுத்துவது கூரைப்புடவை. புதிதாக உடுத்துவது கோடிப்புடவை. கு.கதிரேசன், கப்பலுார், மதுரை.*உடனடி பலனுக்கு மந்திரத்தை ஜபிக்கலாமா, எழுதலாமா... உடனடி பலனுக்கு மந்திரத்தை மனதிற்குள் ஜபியுங்கள். ஜபித்தபடி எழுதினால் சிறப்பு. ந.சியாமளா, திங்கள்சந்தை, கன்னியாகுமரி.*கோதுாளி என்றால்...மேய்ச்சல் முடிந்து பசு வரும் போது அதன் கால்பட்ட மண்ணில் இருந்து கிளம்பும் புழுதி கோதுாளி. ப.பிரவீணா, சிவாஜிநகர், பெங்களூரு.*பிறந்தநாள், நினைவுநாள் எதைக் கொண்டாட வேண்டும்?பிறந்த நாளில் கொண்டாட்டம், நினைவு நாளில் வழிபாடு, அன்னதானம் செய்வது நல்லது.