உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.பாஸ்கரன், கரோல்பாக், டில்லி. *மகாபுருஷர் யார்?போரின் போது ஆயுதத்தை இழந்தார் ராவணன். எதிரியான அவரிடம் இரக்கப்பட்டு 'இன்று போய் நாளை வா' என சொன்னார் மகாபுருஷரான ஸ்ரீராமர். வி.ரஜினி, நாகர்கோவில், கன்னியாகுமரி. *பக்தனின் குணம் என்ன?துாய்மையான மனம், ஒழுக்கம். பி.பத்மா, ராமநாதபுரம், கோயம்புத்துார். *தனியாக அல்லது தம்பதியாக விரதமிருத்தல் - எதற்கு பலன் அதிகம்?பலன் ஒன்றே. தம்பதியாக விரதமிருப்பது விசேஷம். எம்.சுவேதா, குற்றாலம், தென்காசி. *பிறந்த நட்சத்திரம் இரண்டு நாள் இருந்தால் எந்த நாளில் கொண்டாட வேண்டும்?சூரிய உதயத்தில் இருந்து 4 மணி நேரத்திற்குள் உங்கள் நட்சத்திரம் இருந்தால் அந்த நாளே பிறந்தநாள். ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார். *மரணத்தை கண்டு பயப்படாதவர் யார்?துறவிகள். ஏனெனில் பிறவியை விட்டு விலகி கடவுளை உணர்ந்தவர்கள் அவர்கள். தி.லோகநாதன், தோப்பூர், மதுரை*எந்த மூலையில் போர்வெல் தோண்டலாம்?வடகிழக்கு (ஈசான்யம்) மூலையில் தோண்டுவது நல்லது. முடியாத போது வடமேற்கு (வாயு) மூலையில் தோண்டலாம்.பா.மணிவண்ணன், எழும்பூர், சென்னை. *ராகு, எமகண்டத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லையே...ராகு, கேது அசுர கிரகங்கள் என்பதால் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. அ.மாயூரா, ஹலசூரு, பெங்களூரு. *இந்திரியம் என்றால் என்ன?கண், காது, மூக்கு, வாய், மெய்(உடம்பு) ஆகியவை இந்திரியம். வி.ரம்யா, ஆண்டிப்பட்டி, தேனி. *அரச மரத்தை வழிபடுவது ஏன்?மகாவிஷ்ணுவின் அம்சம் அரசமரம். இதைச் சுற்றுவதும், இங்கு தியானம் இருப்பதும் நல்லது. இதனால் மனபலம் அதிகரிக்கும்.