உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

பி.ஸ்ரீநிதி, மேலுார், மதுரை. *புத்தகம் காலில் மிதிபடலாமா...மிதிபடக் கூடாது. சரஸ்வதியின் அம்சமான புத்தகம் தவறி விழுந்தாலோ, காலில் பட்டாலோ தொட்டுக் கும்பிடுவது அவசியம். வி.சந்தோஷ், மாகடி, பெங்களூரு.*குழந்தைகள் படிப்பில் சிறக்க...கீழ்க்கண்ட பாடலை படியுங்கள். நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.எம்.மித்ரா, வால்பாறை, பொள்ளாச்சி.*கூத்தனுார் என ஏன் பெயர் வந்தது?புலவர் ஒட்டக்கூத்தருக்கு இந்த தலத்தில் உள்ள சரஸ்வதி அருள்புரிந்தாள். அதனால் இந்த ஊரை கூத்தனுார் என அழைக்கிறோம். பி.ஹரிணி, இலஞ்சி, தென்காசி.*விஜயதசமியை கொண்டாடுவது ஏன்?அசுரர்களான ராவணன், மகிஷாசுரனை நவராத்திரியின்போது ராமரும், துர்கையும் அழித்தனர். வெற்றிக்குரிய இந்நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். கே.அருண், கீர்த்திநகர், டில்லி.*விஜயதசமிக்கும், வன்னி மரத்திற்கும் தொடர்பு உண்டா?போரில் வெற்றி பெற இம்மரத்தின் அடியில் ஆயுதங்களை வைத்து வழிபடுவர். கோயிலில் விஜயதசமியன்று வன்னிமர பூஜை நடக்கிறது. எல்.சிவரஞ்சனி, திருப்போரூர், செங்கல்பட்டு. *தட்சிணாமூர்த்தியை வழிபட்டால்...கல்வி வளர்ச்சி உண்டாகும். நல்ல புத்தி, ஞானம் உண்டாகும். எஸ்.ரமணி, கம்பம், தேனி.*மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க...சரஸ்வதியின் அருளைப் பெற குமரகுருபரர் பாடியது சகலகலாவல்லிமாலை. இதை தினமும் படியுங்கள். அ.ஆதித்யா, அருமனை, கன்னியாகுமரி. *சரஸ்வதி ஏன் வெள்ளை ஆடை அணிகிறாள்?கள்ளம், கபடமின்மை, அறிவு, மனத்துாய்மையின் அடையாளம் வெள்ளை. கே.பூமிகா, திருமாணிகுழி, கடலுார். *சரஸ்வதியின் பெயர்களை கூறுங்கள்.பாரதி, வாணி, சகலகலாவல்லி, வாக்தேவி, கலைமகள், மேதாதேவி, ஹம்சவாகினி, நாமகள்