கேளுங்க சொல்கிறோம்
ஏ.ராகவன், கால்காஜி, டில்லி: *பெற்றோரை புறக்கணித்தால்... பெற்றோருக்கு செய்த பாவம் பல தலைமுறைக்கு தொடரும். இதற்கு பரிகாரமே கிடையாது. அ.வரலட்சுமி, மாமண்டூர், காஞ்சிபுரம்: *விளக்கின் ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றணுமா...பண்டிகை நாளில் ஐந்திலும், மற்ற நாளில் ஒன்றிலும் தீபம் ஏற்றுங்கள். பி.மாணிக்கம், சிவாஜி நகர், பெங்களூரு: *கார்த்திகை தீபத்தன்று மெழுகுவர்த்தி ஏற்றலாமா?ஹிந்து மதத்தில் மெழுகுவர்த்திக்கு இடம் இல்லை.எம்.ராஜிராதா, நாகமலை, மதுரை: *ஐயப்ப பக்தர்கள் தரையில் படுக்கலாமா?விரத காலமான 41 நாளும் தர்ப்பை, கோரைப்புல், பனைஓலை பாய்களில் படுக்கலாம்.பே.மிருளானி, மருதமலை, கோயம்புத்துார்: *சங்காபிஷேகம் நடத்துவது ஏன்?அசுரனான சங்கசூடன் சாபம் பெற்றதால் கடலில் சங்காக மாறினான். கார்த்திகை திங்கள் அன்று சிவனுக்கு சங்கால் அபிஷேகம் செய்பவர்கள் நன்மை அடைய வேண்டும் என வரம் பெற்றான். வி.குமார், தச்சநல்லுார், திருநெல்வேலி: *ஒரு முக விளக்கை எந்த திசையில் ஏற்றலாம்?கிழக்கு - துன்பம் தீரும் மேற்கு - கடன் தீரும்வடக்கு - பணம் சேரும்தெற்கு - ஏற்றக் கூடாதுசி.முருகன், வில்லியனுார், புதுச்சேரி: *அகண்ட தீபம் என்றால்...இடை விடாமல் எரியும் தீபம். தி.இலக்கியா, ஆண்டிபட்டி, தேனி: *மண் அகல் விளக்கின் சிறப்பு என்ன?மண்ணால் ஆன அகல் விளக்கேற்ற மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். கிரக தோஷம், தீயசக்தி நெருங்காது. ரா.ராஜா, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி: *எந்த எண்ணெய்யில் விளக்கேற்றக் கூடாது?கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய்.