உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

சி.பவித்ரா, சக்குர்பூர், டில்லி: தண்ணீரை வீணாக்கினால்... பணத்தட்டுப்பாடு, கடன், வறுமை ஏற்படும். ரா.ஆதித்யா, அருவங்காடு, நீலகிரி: சிலர் எச்சில் தொட்டு பணத்தை எண்ணுகிறார்களே... மகாலட்சுமியின் அம்சம் பணம். அதை எச்சில்படுத்தலாமா?சே.கோமல், ஹலசூரு, பெங்களூரு: வாகன விபத்து நேராமல் இருக்க...புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை வழிபடுங்கள். பி.அழகுராஜ், இடைகால், தென்காசி: குழந்தை நல்லவனாக வளர...நல்லதை பேச, செய்ய கற்றுக் கொடுங்கள். வி.சுகுமார், எழுமலை, மதுரை: ராமாயணம், மகாபாரதத்தை எந்த நாளில் படிக்கத் தொடங்கலாம்? தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி கு.விஸ்வா, வில்லிவாக்கம், சென்னை: அன்னதானம் செய்ய பணம் இல்லை. என்ன செய்ய?உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே போதும். எம்.அருள், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி: தடையின்றி செயல் நிறைவேற... உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் தொடங்குங்கள். ரா.இசக்கி, ஆண்டிபட்டி, தேனி: ஜென்ம நட்சத்திரத்தன்று என்ன செய்யலாம்? ஹோமம், கிரகப்பிரவேசம், பத்திரப்பதிவு செய்யலாம். வீடு கட்ட தொடங்கலாம்.மு.திருப்பதி, இடையர்பாளையம், புதுச்சேரி: சனிமூலை என்பது என்ன? வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே சனிமூலை.