உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 சா.கிஷோர், சக்குர்பூர், டில்லி: கனவில் யானை துரத்தினால்...விநாயகருக்கு நேர்த்திக்கடன் பாக்கி இருந்தால் இப்படி கனவு வரும். சொ.மீனாட்சி, அலங்காநல்லுார், மதுரை: நேர்த்திக்கடன், பரிகார பூஜை - ஒரே நாளில் செய்யலாமா?முதலில் நேர்த்திக்கடன், மற்றொரு நாளில் பரிகார பூஜையை செய்யுங்கள். யு.ஆனந்தி, திப்பசந்திரா, பெங்களூரு: ஆஸ்துமா தீர எந்தக் கோயிலுக்கு செல்லலாம்?காற்று தலமான காளஹஸ்திக்கு செல்லுங்கள்.எம்.திவ்யா, மாடப்பாக்கம், சென்னை: இறந்த சுமங்கலியின் தாலியை என்ன செய்யலாம்?பூஜையில் வைத்து சுவாசினி தேவதையாக வழிபடலாம். மகன்கள் மோதிரமாக அணியலாம். வி.முருகன், தாடிக்கொம்பு, திண்டுக்கல்: தினமும் நவக்கிரகத்தை வழிபடணுமா...தினமும் நவக்கிரகத்தை வழிபட்டால் தெய்வ அருள் தடையின்றி கிடைக்கும்.பொ.மாரி, உக்கிரன்கோட்டை, திருநெல்வேலி: விரத நாளில் மண் பானையில் சமைக்கலாமா...வேண்டிக் கொண்டால் அப்படி சமைக்கலாம். மா.குமரன், தாராபுரம், திருப்பூர்: வடக்கு நோக்கி படுக்கலாமா...வடக்கில் ஈர்ப்பு விசை அதிகம் என்பதால் மூளை பாதிக்கும். மற்ற திசையில் படுங்கள். அ.சிவா, கல்குளம், கன்னியாகுமரி: நவாவரண பூஜையை எந்த தெய்வத்திற்கு நடத்துவர்?ராஜேஸ்வரி, துர்கை அம்மனுக்கு பவுர்ணமி அன்று நடத்துவர். இ.ராஜன், வில்லியனுார், புதுச்சேரி: அம்பு படுக்கையில் பீஷ்மர் காத்திருந்தது ஏன்?உத்ராயண புண்ணிய காலமான தை மாதத்தில் உயிர் விட்டால் நல்லது என்பதால்.