கேளுங்க சொல்கிறோம்
ஆர்.ரோஜா, உத்திரமேரூர், காஞ்சிபுரம்: குழந்தைக்கு சோறு ஊட்ட நாள் பார்க்கணுமா?பார்க்கணும். நல்ல நாளில் சோறு ஊட்டுங்கள். எம்.மல்லிகா, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி: பிறந்த குழந்தைக்கு எத்தனை நாளில் பெயர் சூட்டலாம்?அவரவர் குலவழக்கப்படி தீட்டு கழிந்த பின் பெயர் சூட்டலாம். எஸ்.குஷ்பூ, நிலக்கோட்டை, திண்டுக்கல்: யானைச் சாணத்தை சாம்பிராணிக்கு பயன்படுத்தலாமா...பூஜைக்கு பசு சாணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வி.தாமரை, மடத்துக்குளம், திருப்பூர்: ஒரே கோயிலில் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலத்தில் பெருமாள் இருப்பது ஏன்?இவை முறையே அறிவு, தொழில், அமைதியை குறிக்கும். இதை தரிசித்தால் நன்மை. கே.கனகா, இளையான்குடி, சிவகங்கை: மதுரை கூடலழகர் போல எட்டெழுத்து விமானம் எங்குள்ளது?சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயிலில். கு.துளசி, திருச்செந்துார், துாத்துக்குடி: திருநீறிட்டான் மதில் எங்குள்ளது?திருச்சி திருவானைக்காவல் கோயிலில். 8,000 அடி நீளம், 35 அடி உயரம் கொண்ட இதை சித்தராக வந்த சிவன் கட்டினார். பா.லல்லி, கோவை: மவுன விரதம் இருந்தால்...உள்ளம், உடல் பலம் பெறும். உணர்வு கட்டுப்படும். டி.லில்லி, தேரூர், கன்னியாகுமரி: வழிபாட்டின் போது அம்மன் தலையில் இருந்து பூ விழுந்தால்...அம்மன் அருளால் விருப்பம் நிறைவேறும். க.தமன்னா, ஏரோசிட்டி, டில்லி: பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?அணியலாம். மாதவிடாய் நாளில் அணிய வேண்டாம்.