கேளுங்க சொல்கிறோம்
மு.அனாமிகா, சுரண்டை, தென்காசி: மகாலட்சுமி அருள் பெற...சூரிய உதயம், அஸ்தமனத்தின் போது விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுங்கள். எம்.அஞ்சுஸ்ரீ, கரோல்பார்க், டில்லி: ஜாம்பவான் யார்?போர்க்களத்தில் ராமபிரானுக்கு துணையாக இருந்தவர். அனுமனின் திறமையை அவருக்கே எடுத்துச் சொன்னவர். எம்.பொன்விழி, அன்னுார், கோயம்புத்துார்: சூரியனுக்கு உரிய ஸ்லோகம்... ஆதித்யம் பாஸ்கரம் பானும் ரவிம் சூர்யம் திவாகரம்!நாம ஷட்கம் ஸ்மரேந்நித்யம் ஸர்வ பாப விநாசனம்!!ஆர்.தனபால், புதுபெருங்களத்துார், சென்னை: ஒரே மாதத்தில் இரண்டு கார்த்திகை வந்தால்...இரண்டிலும் விரதம் இருக்கலாம். வழிபாடும் செய்யலாம். ரா.ரங்கசாமி, வடுகபட்டி, தேனி: நெல்லிக்காயை நைவேத்யம் செய்யலாமா?செய்யலாம். தனியாகவோ அல்லது உணவில் கலந்தோ நைவேத்யம் செய்யுங்கள். கே.லிங்கேசன், நாகர்கோவில், கன்னியாகுமரி: குலதெய்வக் கோயிலின் நிர்வாகி இறந்து விட்டார். அதை நான் தொடரலாமா? கோயிலுக்கு உரியவர்கள் அந்த பணியைத் தொடரலாம். எஸ்.சரவணன், தட்டானுார், மதுரை: புராணங்களின் சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள். வேதத்தின் நுட்பமான கருத்தை விளக்குவது புராணம். வா.மூர்த்தி, கூத்தப்பாக்கம், கடலுார்: முதலில் கயாவில் சிராத்தம். பின்பு தான் காசியா...ஆமாம். இத்துடன் கங்கா, சுவாசினி பூஜையை காசியில் செய்ய யாத்திரை நிறைவுபெறும். கு.அனுஸ்ரீ, திருநின்றவூர், திருவள்ளூர்: கடையில் சேலை வாங்குவதாக கனவு கண்டால்...உங்களின் ஆசை கணவரால் உடனே நிறைவேறப் போகிறது.