உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 எம்.முருகன், நாகர்கோவில், கன்னியாகுமரி: ஆன்மிகம் வளர...?தினமும் திருநீறு, திருமண் அணிந்து கோயிலுக்கு செல்லுங்கள். ஹிந்து மதத்திற்கு நெருக்கடி வரும் போது ஒற்றுமையாக இருங்கள். செ.சேஷாத்திரி, பெங்களூரு: இப்போது சினிமாவில் ஆன்மிகம் இல்லையே...?திட்டமிட்டே ஆன்மிகத்தை அழிக்கிறார்கள். இதற்கு பெயர் 'மதச்சார்பின்மை'. இதனால் குற்றமும் அதிகரிக்கிறது. ஆர்.மணிவாசகம், திருப்பரங்குன்றம், மதுரை: நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க...?காலை வழிபாடு முடிந்ததும் ஏற்கனவே திட்டமிட்ட பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுங்கள். மு.ராதிகா, சுரண்டை, தென்காசி: அன்னதானம் அவசியமா...?அவசியம். பசித்தவருக்கு உணவளித்தால் பாவம் குறையும். எம்.மாளவிகா, வாஸ்காஸ், டில்லி: குழந்தைகள் சாப்பிட்ட மீதி உணவை காகத்திற்கு வைக்கலாமா?வைக்கலாம். ஓர் உயிர் சாப்பிடுவது நல்லது தானே... ஆர்.மணி, திருத்தணி, திருவள்ளுர்: *திருவிழாவில் தேர் இழுத்தால்...?ஊரில் அமைதியும், வீட்டில் சந்தோஷமும் இருக்கும். வி.ஸ்ரீநிவாசன், சிட்டலபாக்கம், சென்னை: *பழைய விநாயகர் சிலை உடைந்து விட்டது. வழிபடலாமா?உடைந்த இடத்தை சரி செய்து வழிபடலாம். எஸ்.கண்ணன், நெய்வேலி, கடலுார்: சனிக்கிழமை அன்று முருகன் கோயிலில் மொட்டை போடலாமா?கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டாமே.ரா.அம்பிகா, வேடசந்துார், திண்டுக்கல்: சன்னதியில் திரை இட்டிருந்தால் வழிபாடு செய்யலாமா?வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.