உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கணேஷ்.கே, ராயபுரம், சென்னை: ஞாபக சக்தி வளர... புரிந்து படிப்பதும், அதை சிந்திப்பதும், பார்க்காமல் எழுதிப் பார்ப்பதும் அவசியம். வல்லாரைக்கீரையை உண்ணுங்கள். பாலன்.எம், திருநள்ளாறு, புதுச்சேரி: கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைக்க...ஞாயிறன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபடுங்கள். ஆர்த்தி.ஏ, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்: பதினாறு பேறுகளில் முக்கியமானது எது?பக்தி. மற்ற பேறுகளை பக்தியால் பெறலாம். முருகன்.பெ, சென்னிமலை, திருப்பூர்: உறவுகளிடம் பகை இல்லாமல் வாழ...தவறு செய்யாதவர் யாருமில்லை. உறவு நீடிக்க விட்டுக் கொடுங்கள். ராம்.ரா, சின்னமனுார், தேனி: கணவர் செய்த சிவபூஜையை அவர் மறைவுக்குப் பின் மனைவி தொடரலாமா?தொடரலாம். அவர் விட்டுச் சென்ற நல்லவைகளை தொடருங்கள். அருண்குமார்.கோ, அய்யாதோப்பு, கன்னியாகுமரி: திருமணத்திற்கு நாள் குறித்த பின் இறப்புக்கு செல்லலாமா?மணமக்களும், அவர்களின் பெற்றோரும் செல்லக் கூடாது. சித்ரா.வி, வத்திராயிருப்பு, விருதுநகர்: மொட்டை மாடியில் தானாக வளர்ந்த அரச மரத்தை அகற்றலாமா? அகற்றுவதில் தவறில்லை. கிரிஜா.கு, வீரவநல்லுார், திருநெல்வேலி: அடுக்கு மாடி குடியிருப்பில் கோலம் இடலாமா?உங்கள் வீட்டு வாசலில் கோலமிடுவதில் தவறில்லையே... பூர்ணா.பா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: எருமை சாணத்தில் வாசல் தெளிக்கலாமா?பசுஞ்சாணமே நல்லது. இல்லாவிட்டால் இதை பயன்படுத்துங்கள்.