உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ஹரிஹரன்.எஸ், பசவன்குடி, பெங்களூரு: கருவறையின் பின்புறத்தில் தியானம் செய்யலாமா...செய்யலாம். ஆனாலும் கோயிலில் உள்ள தியான மண்டபத்தில் செய்வது நல்லது. சஷ்டிகா.ர, வில்லிவாக்கம், சென்னை: கலி முற்றியதன் அடையாளம்...நல்லவர்கள் துன்பப்படுவர். மழை குறையும். மக்கள் கடமையை செய்யமாட்டார்கள். சங்கரி.சி, சிதம்பரம், கடலுார்: கையில் அணியும் காப்பு எந்த உலோகத்தில் இருக்க வேண்டும்?தங்கம், வெள்ளி, தாமிரம்.நித்ரன்.கே, பல்லடம், திருப்பூர்: கோயில் திருவிழாவை எளிமையாக நடத்தலாமா...நடத்தலாம். அனைவரும் சேர்ந்து நடத்துவது நல்லது. பாலா.கு, கல்லல், சிவகங்கை: திருப்பணி முழுமை பெறாமல் கும்பாபிஷேகம் நடத்தலாமா?கூடாது. திருப்பணி முழுமை பெற்ற பிறகே நடத்த வேண்டும். கோபால்.கே, வைகுண்டதோப்பு, கன்னியாகுமரி: ஒருவரை பிடிக்காத போது சண்டையிடாமல் விலகலாமா...வீணாக சண்டை எதற்கு? விலகுவது புத்திசாலித்தனம். நிர்மல்.கு, திருச்செந்துார், துாத்துக்குடி: அறிவுரை, உபதேசம் இரண்டும் ஒன்றா...இல்லை. அனைவருக்கும் பொதுவானது அறிவுரை. ஆன்மிகத்திற்கு உரியது உபதேசம். அபிராமி.ம, திருநின்றவூர், திருவள்ளூர்: நோயாளியை பார்க்க நல்ல நேரம் பார்க்கணுமா?தேவையில்லை. உடனடியாக அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள். குமார்.எம், பழநி, திண்டுக்கல்: இறந்தவருக்கு ஐந்தாம் நாளில் காரியம் நடத்தலாமா?கூடாது. சந்ததி நலமுடன் வாழ அவரவர் வழக்கப்படி செய்வது நல்லது.