உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* தீபாவளி நன்னாளில் எண்ணெய்யில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். * தீபாவளியன்று வடமாநில மக்கள் லட்சுமி குபேர பூஜையை செய்கின்றனர். * முரனைக் கொன்றதால் கிருஷ்ணருக்கு 'முராரி' எனப் பெயர் வந்தது. * நரகாசுரன் ஆட்சி செய்த இடம் பிராக்ஜோதிஷ்புரம். இது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ளது. * இந்திரனின் தாயான அதிதியிடம் குண்டலத்தை அபகரித்தான் நரகாசுரன். * ஐப்பசியில் காவிரி நதியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்பர். * தீபாவளியன்று விளக்கேற்றி குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள். * சமண சமயத்தை சீர்படுத்தியவர் மகாவீரர். அவர் முக்தி அடைந்த நாளே தீபாவளி. * குப்த பேரரசில் தத்துவவாதியாக இருந்தவர் வாத்ஸ்யாயனர். இவர் தனது நுாலில் 'யட்ச ராத்திரி' என தீபாவளியைக் குறிப்பிடுகிறார். * முன்னோரின் ஆசியைப் பெறும் வகையில் ஜப்பானியர்கள் விளக்கேற்றி கொண்டாடுகின்றனர். * ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி திதியையே தீபாவளியாக கொண்டாடுகிறோம். * தீபாவளியன்று இரவில் சிவனுக்குரிய மாத சிவராத்திரி வரும்.