உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* எந்த நிலையில் இருந்தாலும் சிவபெருமானை மறக்கக்கூடாது என்று சொன்ன அருளாளர் சேக்கிழார். * சிவபெருமானின் அடியார்களான 63 நாயன்மார்களே முழுமுதல் குருநாதர்கள் ஆவர்.* மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையைச் சேர்ந்தவர் கச்சியப்ப முனிவர். இவர் பாடிய விநாயக புராணத்தில் உள்ள பாடல்களை பாடினால் துன்பம் விலகும். * திருமாலின் 108 திவ்ய தேசங்களில் அதிக கோயில்கள் காவிரிக்கரையில் உள்ளன. * அட்டமா சித்திகளில் ஒன்றான பிராப்தி என்பதற்கு 'அடக்கியாளுதல்' எனப் பொருள். * திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் காதிலுள்ள தாடங்கத்தை (தோடு) தரிசிப்பது சிறப்பு. இதில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. * தென்காசி மாவட்டம் திருமலைக்கோயில் முருகனை மகனாக தத்து எடுத்து அக்கோயில் சொத்துக்காக நீதிமன்றம் வரை சென்று மீட்டவர் சிவகாமி அம்மை பரதேசியார். * சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் 2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் கணியன் பூங்குன்றனார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் நம் பண்பாட்டிற்கு உயிர் கொடுத்தவர் இவரே. * தமிழ் படிக்க விரும்புகிறேன் என தைரியமாகவும், அதே நேரத்தில் பணிவாகவும் தன் தந்தையிடம் தெரிவித்தவர் தமிழ்த்தாத்தா என போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர். * வீட்டு வாசலில் விருந்தினர் வருகிறார்களா என பார்த்த பின்பு உண்பதே முன்பு வழக்கமாக இருந்தது.