இந்த வாரம் என்ன
டிச.22 மார்கழி 6: திருக்குற்றாலம் குற்றால நாதர் பஞ்சமூர்த்திகளுடன் தேர். திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவக்காட்சி. கரிநாள். டிச.23 மார்கழி 7: வைகுண்ட ஏகாதசி. சகல விஷ்ணு கோயில்களில் பரமபதவாசல் திறப்பு. காஞ்சிபுரம் பச்சைவண்ணன், பவளவண்ணன் கருடன் வாகனத்தில் காட்சி. ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகர் காலை ருத்திராக்க விமானத்தில் புறப்பாடு. டிச.24 மார்கழி 8: பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் மாலையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. திருநெல்வேலி, சங்கரன்கோவில், வீரவநல்லுார், திருக்குற்றாலம் தலங்களில் சிவபெருமான் வீதியுலா. கார்த்திகை விரதம்.டிச.25 மார்கழி 9: ஆவுடையார்கோவில் தேர். மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் இத்தலங்களில் இராப்பத்து உற்ஸவ சேவை. டிச.26 மார்கழி 10: பவுர்ணமி. சகல சிவன் கோயில்களிலும் நடராஜருக்கு அபிேஷகம். சோலைமலை கள்ளழகர், திருமோகூர் காளமேகப்பெருமாள் தலங்களில் இராப்பத்து உற்ஸவசேவை. டிச.27 மார்கழி 11: சிதம்பரம், திருவாலங்காடு, குற்றாலம், மதுரை, திருநெல்வேலி தலங்களில் ஆனந்த தாண்டவ ஆருத்ரா தரிசனம்.கரிநாள்.டிச.28 மார்கழி 12: பரசுராம ஜெயந்தி. ஸ்ரீரங்கம் நம்பெருமான், குடந்தை சாரங்கபாணி தலங்களில் இராப்பத்து உற்ஸவ சேவை. பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.