உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.மணிவண்ணன், எழும்பூர், சென்னை.*ஞாயிறன்று அசைவம் சாப்பிடலாமா... சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிறன்று அசைவம் சாப்பிடாமல் அவரை வழிபட வேண்டும். ஆத்ம பலம், உடல் நலம், ஆளுமைத் திறன், தோற்றப்பொலிவு கிடைக்கும்.பி,மைதிலி, ஜனக்புரி, டில்லி.*சூரிய பகவானின் மகனாக கர்ணன் பிறந்தது ஏன்?துார்வாசரிடம் உபதேசம் பெற்ற குந்தி, சூரிய மந்திரம் ஜபித்ததால் பிறந்தவன் கர்ணன். அவனே முற்பிறவியில் 'ஆயிர கவச' அரக்கனாக இருந்த போது சூரிய பகவானுக்கு மகனாக பிறக்கும் வரத்தை பெற்றிருந்தான்.எஸ்.வினித், ஹலசூரு, பெங்களூரு.*தை கார்த்திகையின் சிறப்பு என்ன?கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகப்பெருமானை வளர்க்கத் தொடங்கிய நாளே தைக்கார்த்திகை. அன்று விரதமிருந்தால் நினைத்தது நிறைவேறும். வி.ராஜன், தச்சநல்லுார், திருநெல்வேலி.*சூரிய பகவானுக்கு பொங்கல் வைப்பது ஏன்?உணவும், நீரும் தரும் இயற்கைக்கு நன்றி செலுத்தவே சூரிய பகவானுக்கு பொங்கல் வைக்கிறோம். டி.ராகவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.*உத்ராயணம், தட்சிணாயனம் என்றால் என்ன?சூரிய பகவான் வடக்கு நோக்கிச் செல்லும் காலம் (தை - ஆனி) உத்ராயணம். தெற்கு நோக்கிச் செல்லும் காலம் (ஆடி - மார்கழி) தட்சிணாயனம். எம்.அனிதா, கன்னிவாடி, திண்டுக்கல்.*சூரிய பகவானுக்கு கோயில் எங்குள்ளது?கும்பகோணம்(தமிழகம்) அருகிலுள்ள சூரியனார் கோவில், கோனார்க்கில் (ஒடிசா) உள்ள சூரியக் கோயில்கள் விசேஷமானவை. எல்.ரவி, திருத்தணி, திருவள்ளூர்.*சூரிய பகவானின் குடும்பத்தினர் யார்?மனைவிகள்: உஷா, பிரத்யுஷா. குழந்தைகள்: எமதர்மன், சனீஸ்வரன், யமுனை. ஆர்.பிரபு, பசுமலை, மதுரை.*சூரிய பகவானுக்குரிய மந்திரம் என்ன?ஜபாகு சும சங்காசம் காஸ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரண தோஸ்மி திவாகரம் இதை சொன்னால் சூரிய பகவான் அருள் கிடைக்கும். வி.ரஜனி, நாகர்கோவில், கன்னியாகுமரி.*ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?முனிவர்களான வியாக்ரபாதர், பதஞ்சலியின் தவத்தை ஏற்று சிவபெருமான் நடன தரிசனத்தைக் காட்டினார். இந்நிகழ்வையே மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று 'ஆருத்ரா தரிசனம்' என சிவன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.*மகர சங்கராந்தி என்றால் என்ன?சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்வதை 'சங்க்ரமணம்' என்பர். தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் செல்லும் நாளே மகர சங்கராந்தி. இந்நாளே தைப்பொங்கல்.