பரபிரம்மத்தை தரிசித்த நாத பிரம்மம்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜ சுவாமிகள். தன் குருநாதரின் உபதேசப்படி ஒரு நாளைக்கு 1,25,000 முறை நாம நாமத்தை ஜபித்தார். இதனால் அவர் வாழ்நாளில் அனுமன், லட்சுமணர், சீதா சமேத ராமபிரானின் தரிசனத்தை பெற்றார். இசைத்துறையின் கர்த்தாவான சுவாமிகள் மனிதர்களாகிய நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எளிய வழிகளை உபதேசம் செய்துள்ளார். அவற்றுள் சில... * மனிதபிறவியின் பயனே கடவுளின் நாமத்தை சொல்வது தான்.* உலகத்திலுள்ள புறஇருளை தினமும் நீக்கும் சூரிய பகவான் போல மனிதரின் அக இருளை தினமும் போக்கும் தன்மை கொண்டது ராம நாமம். * ராம நாம பஜனை செய்பவர்களுக்கு பிறப்பு இறப்பு தொடராது.* ராம நாமம் சொல்வது மட்டுமே ஒருவருக்கு நிரந்தர இன்பம்.* ஒரு நாளாவது ராமா, கோதண்டா, கல்யாணராமா, சீதாபதியே என்று சொல்லுங்கள்.* இம்மந்திரத்தை ஜபிப்பவருக்கு ராஜ யோகம் உண்டாகும்.* சுரங்கத்தில் எடுக்கும் தங்கம் போல இந்த நாமத்தினால் நன்மைகள் அதிகமாகுமே தவிர குறையாது.* தீயவர் ஒருவர் ராமநாமம் சொல்வாராயின் முதலில் அவர் பொய் சொல்வதை நிறுத்துவார். * ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் உடையவர் நெறியே உலகத்திற்கு பொதுவானதும் சிறப்பானதுமான நெறி.* வால்மீகி, கஜேந்திரர், பிரம்மா ஆகியோருக்கு பெரிய துன்பம் வந்த போதும் ராம நாமம் சொல்லி அதில் இருந்து விடுபட்டனர்.