தாரக மந்திரம்
UPDATED : ஜன 19, 2024 | ADDED : ஜன 19, 2024
* 'மரா'என தொடர்ந்து உச்சரித்து 'ராம' காவியமாகிய ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி.ஹிந்து மக்களின் தாரக மந்திரம் ராம நாமம்.* என்றும் சிரஞ்சீவியான வாயுபுத்திரனாகிய அனுமன் ராமபிரானின் உண்மைத் தொண்டர். அவருக்கு ராம நாமமே உயிர் மூச்சு. இம்மந்திரத்தை உச்சரித்து கடலை கடந்தவர் அவரே.* ராமபிரானின் வெற்றியை அனுமன் சுருக்கமாக சீதாதேவிக்கு தெரிவித்த மந்திரம் ஸ்ரீராமஜெயம்.* ராம பாணத்தை விட ராம நாமமே சிறந்தது என நிருபித்து சேது பாலத்தை உருவாக்கினர் வானர படைகள். * முக்தி தலங்கள் ஏழினுள் ஒன்றான காசியிலுள்ள சிவபெருமான், 'ராம' என்னும் நாமத்தை உயிர்களின் காதில் உபதேசிக்கிறார். * மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரம் பத்து. அதில் மூன்று 'ராம'என்னும் பெயர்களை கொண்டது. பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்.