உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* மனிதர்களுக்கு பொதுவான தர்மங்களில் அகிம்சையே முதலானது என்கிறது மனு தர்ம சாஸ்திரம். * உடலால் துன்புறுத்துவது மட்டுமல்ல. யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் ஏற்பட வேண்டுமென மனதால் நினைப்பதும் கூடாது. * 'அகிம்சையை பின்பற்றினேன். மனம் வசப்பட்டது' என பல மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு காரணம் அகிம்சையால் கோபம் போகும். மனம் அன்பில் திளைக்கும். * அகிம்சையை முழுமையாக பின்பற்றுபவர்கள் இருக்குமிடத்தில் குரூர சிந்தனை கொண்டவர்கள் வந்தாலும் நாளடைவில் மனதில் அமைதி உண்டாகும். இதையே, 'அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம்! தத்ஸந்நிதௌ வைரத்யாக:' என்கிறது யோக சூத்திரம். * 'அஹிம்ஸா பரமோ தர்ம:' என ஜைன, பவுத்த மதங்களும் அனைவரும் அகிம்சையை பின்பற்ற வலியுறுத்துகின்றன. ஆனால் ஹிந்து மதம் துறவிகளுக்குத்தான் தீவிரமாக சொல்லியுள்ளது. இதனால் துறவிகள் இலையைக் கூட கிள்ளக்கூடாது. தாவரங்களைச் சமைத்து உண்ணக்கூடாது என்கிறது. * துறவியைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபடுவோரும் அகிம்சையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக விரதமிருக்கின்றனர். * மனம், மொழி, மெய் என்ற திரிகரணங்களாலும் அகிம்சையைப் பின்பற்றுவோரை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். * ஒரு கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதும், போரில் எதிரிகளை வதைப்பதும் பாவம் ஆகாது. செயலை விட நோக்கம்தான் முக்கியம்.