உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ஜி.சஞ்சனா, மேலுார், மதுரை.*சிறப்பான முகூர்த்தம் எது?பிரதமை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி, அமாவாசையை தவிர, மற்ற திதிகளில் வரும் முகூர்த்தம் சிறப்பானவை. எம்.ஆர்த்தி, சிங்காநல்லுார், கோயம்புத்துார். *குழந்தை இல்லாவிட்டால் தெய்வத்தை மானசீகமாக தத்து எடுக்கலாமா?தத்து எடுப்பது தம்பதியரின் தனிப்பட்ட விஷயம். மன அமைதிக்கு வழிபாட்டில் ஈடுபடுவதே தீர்வு. பி.ஸ்ரீநிதி, திருவட்டாறு, கன்னியாகுமரி.*திருமணமான பெண்களின் கடமை என்ன?தர்மநெறி தவறாமல் ஆண்களை வழிநடத்துவது இவர்களின் கடமை. எம்.அவந்திகா, குறிஞ்சிப்பாடி, புதுச்சேரி.*தேவகுரு(பிரகஸ்பதி)வும், அசுரகுரு(சுக்கிரன்)வும் ஒரே ராசியில் இருந்தால்……இருவரும் இருக்கும் ராசி, லக்னத்தைப் பொறுத்து நன்மை, தீமை வரும். எல்.ரஞ்சனி, திருப்போரூர், செங்கல்பட்டு. *ஜீவசமாதி கோயிலை இடித்து அதன் மீது சாலை அமைத்து விட்டனர். என்ன செய்யலாம் ?இப்படியும் நடக்கிறதே... வேறிடத்தில் கோயில் கட்டி பூஜை நடத்துங்கள். கே.ஆனந்தன், உடன்குடி, துாத்துக்குடி.*எங்கள் வீட்டில் குளவிகள் கூடு கட்டியுள்ளன. அதை கலைக்கலாமா?கர்ப்பிணி வாழும் வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் கலைக்கக் கூடாது. மற்றபடி கலைத்தால் தவறில்லை. கே.பவானி, சன்னபட்னா, பெங்களூரு.*கடவுள் பாடல்களில் அவன், இவன் என ஒருமை இடம் பெறுகிறதே... @அன்பின் மிகுதியால் ஒருமையில் பாடுவது மரபு. தகப்பன், பாட்டன், முப்பாட்டன் என நாம் சொல்வதில்லையா... எம்.ராஜராஜன், திருநின்றவூர், திருவள்ளூர்.*அலுவல் காரணமாக அமாவாசை, கார்த்திகை நாளில் முடிவெட்டினேன். செய்யலாமா...அந்த நாளை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் கடன் ஏற்பட வாய்ப்புண்டு. வி.ஜனனி, வடமதுரை, திண்டுக்கல்.*விரத நாளில் நோயாளிகளுக்கு கட்டுப்பாடு உண்டா... இல்லை. விரத நியமங்களை முடிந்தளவு பின்பற்றுங்கள். தலைகுளிப்பது, கோயிலுக்கு செல்வதில் மட்டும் விலக்கு உண்டு. சி.கங்கா, பப்பன்கிலேவ், டில்லி.*சிலர் எதை சொன்னாலும் 'ததாஸ்து' என்கிறார்களே...அப்படியே ஆகட்டும்' என பொருள். அதாவது நல்ல விஷயத்தைக் கேட்கும் போது 'நல்லதே நடக்கட்டும்' என ஆசியளிக்கின்றனர்.