உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.ராதா, அருமநல்லுார், கன்னியாகுமரி.*நான் மீண்டும் மீண்டும் ஏமாறுகிறேன். தீர்வு என்ன?விழிப்புடன் பழகுங்கள். சரியான முறையில் திட்டமிடுங்கள். உங்கள் முயற்சியில் எங்கோ தவறு இருக்கிறது. வி.அமுதா, கரோல்பார்க், டில்லி.*சுவாமி சிலைகளை ஜலவாசம், தான்யவாசத்தில் வைப்பது ஏன்?சாதாரண கல் செதுக்கியபின் அது சிலையாக மாறுகிறது. ஜலவாசம், தான்ய வாசத்தால் அது தெய்வீக சக்தி பெறுகிறது. டி.அவந்திகா, சோழவந்தான், மதுரை.*கோயிலில் கொடுத்த பூமாலையை வீட்டிலுள்ள சுவாமி படத்திற்கு அணிவிக்கலாமா?கூடாது. மனிதருக்கு அணிவித்த மாலையை வீட்டிலுள்ள சுவாமிக்கு அணிவிக்கக் கூடாது. கே.விக்னேஷ், கம்பம், தேனி.*கொடிமரம், பலிபீடம் இவற்றின் நடுவே செல்லக்கூடாதா...மூலஸ்தானம் முதல் பலிபீடம் வரையுள்ள பகுதி, கடவுளின் தலை முதல் தொப்புள் வரையாகும். அதனால் குறுக்கே செல்லக் கூடாது. எம்.சுந்தர், திருநாவலுார், விழுப்புரம். *திதியன்று வாஸ்து பூஜை நடத்தலாமா?நடத்தலாம். ஆனால் திதியன்று வாஸ்து பூஜை செய்வதை விட வேறொரு நாளில் நடத்தலாமே. எஸ்.திவ்யா, கேளம்பாக்கம், சென்னை.*விரதமிருக்கும் நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?விரதமிருக்கும் நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தல், சவரம், முடி, நகம் வெட்டுதல் கூடாது. எல்.மகாதேவன், அன்னுார், கோயம்புத்துார். *வீட்டில் வில்வமரம் வளர்க்கலாமா?வில்வம், துளசி போன்ற பூஜைக்குரிய செடிகளை வீட்டில் வளர்க்கலாம். கே.மாலினி, மல்லேஸ்வரம், பெங்களூரு.*ஒருவரின் செயலுக்கு ஏற்றபடிதான் சொர்க்கம், நரகம் கிடைக்குமா?ஆம். செய்த புண்ணியம், பாவத்திற்கேற்ப சொர்க்கம், நரகம் கிடைக்கும். எம்.பவித்ரா, குற்றாலம், தென்காசி.*திருவிடைமருதுார் (தஞ்சை) கோயிலில் உள்ளே போன வழியில் வெளியே வரக் கூடாதா...மன்னர் ஒருவரை பிரம்மஹத்தி (கொலைப்பாவம்) தோஷம் துரத்த, அவர் இங்குள்ள சிவனை சரணடைந்தார். மன்னரை பிடிப்பதற்காக தோஷம் காத்திருந்ததால் வேறு வாசல் வழியே மன்னர் திரும்பினார். அதனடிப்படையில் இது பின்பற்றப்படுகிறது.