எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு!
வருந்துகிறார் வாரியார்* மனதை அடக்கியாளக் கற்றுக்கொண்டவனே உண்மை வீரன். அவனே ஆண்மகன் என்று அனைவராலும் போற்றப்படுவான்.* வயலில் இட்ட விதை ஒன்று நூறாகப் பலன் தருவது போல நாம் செய்தசெயல் நன்மையோ தீமையோ அதற்கு பலமடங்கு பலன் உண்டு. * நான் எனது என்ற எண்ணம் நீங்கினால் ஆசையே உள்ளத்தில் தோன்றாது. * ஒரு பேரும் ஊரும் இல்லாத கடவுள் நமக்காக பல்வேறு திருநாமங்களைத் தாங்கிக் கொண்டு கோயில்களில் அருள்செய்கிறார்.* கடவுள் பக்தி உண்மையானதாக இருந்தால் மனதில் அமைதி நிலைத்திருக்கும். உண்ணாமல் கூட இருக்கலாம். ஆனால், கடவுளை எண்ணாமல் ஒருபோதும் இருக்கக்கூடாது.* பிறவிகளில் உயர்ந்த மனிதப்பிறவியாக வாழும் நாம் நமக்கும் பிறருக்கும் பயனுள்ளவர்களாக வாழ்தல் வேண்டும்.* நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் கடவுளின் அருள் இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியமில்லை.* மனிதன் ஒழுக்கமுள்ளவனாக வாழ்வதற்குச் சிறந்தவழி பக்தி. உண்மையான பக்தி இருக்குமிடத்தில் ஒழுக்கம் குடியிருக்கும். * எத்தனை பெரிய மனிதனாக இருந்தாலும், சிறியமனம் படைத்தவர்கள் தனக்கென்று வாழ்வார்கள். ஆனால், பெருந்தன்மை மிக்கவர்கள் தன்னையும் பிறருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.