கேளுங்க சொல்கிறோம்!
பெற்றோரின் சாபம் தீர என்ன செய்ய வேண்டும்?ஆர்.சிவசுப்ரமணியம், உடுமலைப்பேட்டைகாசிக்கு சமமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, தென்காசி விஸ்வநாதர், அவினாசி அவினாசியப்பரை தரிசிக்கலாம். உடை, உணவு தானம் செய்யலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுக்கலாம். அமாவாசைதோறும் விரதமிருந்து, காகத்திற்கு சோறு படைக்கலாம். பெற்றோரைக் காப்பது கடமை என்பதை பிள்ளைகள் உணர்வது மிக அவசியம்.* ஆசி பெறும் போது, எந்த திசையில் வணங்க வேண்டும்?ஆர்.மலர்க்கொடி, புதுச்சேரிவடக்கு அல்லது மேற்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். கிழக்கு நோக்கி பெரியவர்கள் நின்று திருநீறு பூச வேண்டும்.* மாமனாருக்கு இறுதிச்சடங்கு செய்துள்ள நான், அமாவாசையன்று என்ன செய்ய வேண்டும்? ஆர்.சுப்ரமண்யன், மயிலாப்பூர்அமாவாசையன்று தர்ப்பணம் செய்யும் அதிகாரம் மருமகனுக்கு கிடையாது. மாமனாரின் உடன்பிறந்தவர்கள் யாராவது ஒருவர் தர்ப்பணம் செய்தால் போதும்.தொழிலில் பங்குதாரராக இஷ்டதெய்வத்தை சேர்க்கலாமா?என்.கிரகலட்சுமி, மதுரைதொழிலில் பிரச்னை, தடைகளைச் சந்தித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு லாபம் பெருக இப்படி வேண்டிக் கொள்வர். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை லாபத்தில் குறிப்பிட்ட பங்கை கோயில் உண்டியலில் செலுத்துவர். லட்சார்ச்சனை என்பதன் பொருள் என்ன?கண.கணேசன், திருச்சுழிகடவுளுக்குரிய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி பூக்களைத் துாவி அர்ச்சனை செய்வது 'சகஸ்ரநாமம்'. இதனை நுாறு முறை செய்வது 'லட்சார்ச்சனை'. கண்நோய் தீர எந்த கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்?கே.தேவராஜன், கோவை'ஆயிரம் கண்ணுடையாள்' எனப்படும் திருச்சி, சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு வெள்ளி அல்லது தங்கத்தில் 'கண்மலர்' காணிக்கை செலுத்துங்கள். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வோருக்கும் இது நல்ல பரிகாரம். மறுபிறவி எடுத்த உயிர்களுக்கு செய்யும் தர்ப்பணம் யாரைச் சேரும்?தீ.அசோகன், திருவொற்றியூர்இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்வது பிள்ளைகளின் கடமை. உயிர்களின் மறுபிறவி பற்றிய ரகசியத்தை அறிந்தவர் கடவுள் ஒருவரே. அதை பற்றிய ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை. தர்ப்பணத்தின் பலன், மறுபிறவி எடுத்தாலும் குறிப்பிட்ட உயிரையே சேரும்.