கேளுங்க சொல்கிறோம்!
UPDATED : மே 01, 2020 | ADDED : மே 01, 2020
* சனீஸ்வரருக்கு பூஜை செய்த பிரசாதத்தை வீட்டுக்கு எடுத்து வரலாமா?டி.சந்திரன், காஞ்சிபுரம்சனீஸ்வரரும் சிவபெருமானின் அடியவரே. காசி விஸ்வநாதரை வழிபட்டதன் பயனாக கிரகங்களில் ஒருவராகும் பேறு பெற்றவர். அவருக்கு அர்ச்சனை செய்த தேங்காய், பழம், திருநீறு உள்ளிட்ட அனைத்தையும் எடுத்து வரலாம்.* மனம் உருகி வழிபட்டால் கடவுளை நேரடியாக தரிசிக்க முடியுமா?வி.ரோகிணி, ஊட்டி கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்களில் வாழ்ந்த மக்கள் கடவுளோடு பேசி உறவாடினர். காரணம் அப்போது மக்கள் தர்மவழியில் வாழ்ந்தனர். இப்போது கலிபுருஷன் ஆட்சி நடப்பதால் அதர்மத்தின் பலம் அதிகரித்து விட்டதால் அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் வழிபாட்டுக்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்.* யாரை வழிபட்டால் அதிக வரம் கிடைக்கும்?எஸ்.சோனியா, விருதுநகர்'அம்பிகையை வழிபட்டால் அதிக வரம் பெறலாம்' என்கிறார் மகாகவி பாரதியார். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். 'ஓம்பராசக்தி நம' என்னும் மந்திரத்தை 108 முறை ஜபியுங்கள். அம்பிகையின் அருளால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும். * பிறருக்கு தீங்கு ஏற்படுத்த சிலர் மந்திரம் சொல்கிறார்களே...சரியா?எம்.கவிஷ்மா, விழுப்புரம்நமக்கும், மற்றவருக்கும் நன்மை ஏற்படவே வழிபாட்டில் ஈடுபட வேண்டும். திருமணம், ஆரோக்கியம், வேலைவாய்ப்பு என ஆயிரம் தேவைகள் இருக்கும் போது, எதிர்மறை நோக்கத்துடன் வழிபடுவது நல்லதல்ல. இப்படிப்பட்டவர்கள் முதலில் நல்ல புத்தி பெற கடவுளைச் சரணடைவது அவசியம். மணிவிழாவை எந்த வயதில் நடத்த வேண்டும்?பி.சந்தோஷ், சிவகங்கைகுறிப்பிட்ட வயதுகளில் நடத்தும் விழாக்களுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு. ஐம்பது - பொன், அறுபது - மணி, எழுபது - பவளம், எழுபத்தைந்து - வைரம், எண்பது - முத்து எனக் கொண்டாடுவது நம் மரபு. ஆற்றங்கரைகளில் கோயில்கள் இருப்பது ஏன்?எஸ்.மோனிஷா, புதுச்சேரி நீரின் மேன்மையை உணர்த்தவே ஆற்றங்கரைகளில் கோயில்கள் உருவாக்கப்பட்டன. தண்ணீர் மாசுபட்டால் உயிர்களின் வாழ்வாதாரம் கெடும். உயிர்கள் அழிந்தால் உலகமும் அழியும். எனவே ஆறு, கடல்களை பாதுகாக்கவே அவற்றை புனித தீர்த்தங்களாக கருதி வழிபட்டனர்.