கேளுங்க சொல்கிறோம்
என்.சி.ராஜேஷ், சென்னை *பசுதானம் செய்தால் பாவம் தீருமா?வம் தீரும். பசுதானம் செய்வதால் நீண்ட காலம் வாழ்வீர்கள். பி.கனகாம்பிகை, அவினாசி*பக்தர்கள் இன்றி கோயில்களில் திருவிழா நடத்துவது சரியா?கடந்த ஆண்டு கொரோனாவால் கோயில்களில் திருவிழா நடத்தவில்லை. பக்தர்கள் இல்லாவிட்டாலும் கூட திருவிழா நடக்கிறதே என திருப்தி கொள்ளுங்கள். வி.மணிமேகலை, கள்ளக்குறிச்சி*தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கலாமா?படிக்கலாம். நீண்ட ஆயுள், உடல்நலம், செல்வம் சேரும். கே.கோவிந்தன், திருநெல்வேலி*பக்கத்து வீட்டில் இறப்பு நிகழ்ந்திருக்கும் போது விரதமிருக்கலாமா?முதலில் துக்கத்தை விசாரித்து உதவிகளைச் செய்யுங்கள். பின்னர் தலைக்கு குளித்து விட்டு விரதமிருங்கள். எம்.மைதிலி, சிவகங்கை*யாகசாலையில் எடுத்த நாணயங்களை என்ன செய்யலாம்?பூஜையறை அல்லது பணப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருங்கள். செல்வம் பெருகும். பி.விஷ்ணுபிரியா, துாத்துக்குடி*கடவுளின் திருவடி, திருமுடி எதை முதலில் வணங்க வேண்டும்?முதலில் திருவடியை (பாதம்) வணங்கிய பிறகு திருமேனியைக் காணுங்கள். பின்னர் திருமுடியை(தலை) தரிசியுங்கள். எம்.கஜலட்சுமி, தேனி*உழவாரப்பணி (கோயிலைச் சுத்தம் செய்தல்) செய்தால் கடவுளின் அருள் கிடைக்குமா?கிடைக்கும். உடல், மனம் பலம் பெருகும். கிரக தோஷம் விலகும்.வி.ரவீந்திரன், பெங்களூரு*மோட்ச தீபம் என்றால் என்ன? ஒருவர் இறந்தால் அவரது ஆன்மா சாந்தி அடைய 30 நாட்களுக்கு பிறகு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவர். இதனால் இறந்த உயிர் கடவுளின் திருவடியை அடையும்.சி.மலர்விழி, திருவள்ளூர்*எவர்சில்வர் விளக்கில் தீபம் ஏற்றலாமா?இரும்பு சம்பந்தப்பட்டது எவர்சில்வர். அதனால் அதில் தீபம் ஏற்றக் கூடாது. எஸ்.மீனாட்சி, விழுப்புரம்*பூஜையறையில் வலம்புரிச்சங்கு இருக்கலாமாஇருக்கலாம். தங்கம் அல்லது ரத்தினங்களை சங்கிற்குள் வைத்தும் பூஜிக்கலாம். அபிேஷகத்திற்கும் இதனை பயன்படுத்தலாம்.