கேளுங்க சொல்கிறோம்
பி.கல்யாணராமன், திருத்தணி, திருவள்ளூர்.*மந்திரம் ஜபித்தால் நல்லது நடக்குமா... மந்திரங்களை லட்சம் முறை நம்பிக்கையுடன் ஜபித்தால் நல்லது நடக்கும். ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல். *விளக்கில் எத்தனை முகம் ஏற்றலாம்?பூஜையின் போது ஐந்தும், மற்ற நேரத்தில் ஒன்றும் ஏற்றுங்கள்.ஒருமுகம் - மத்திம பலன் ஐந்து - செல்வ வளம் கே.துரைராஜ், நெய்வேலி, கடலுார். *ஆரூடம், குறி, கைரேகை அடிக்கடி பார்க்கலாமா?பார்க்க வேண்டாம். டி.பாலாமணி, ஏழுதேசம், கன்னியாகுமரி. *விரதத்தன்று உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்கக் கூடாதாமே...வெங்காயம், பூண்டு ஆகியவை காம, கோப உணர்வுகளைத் துாண்டும் என்பதால் விரதநாளில் சேர்ப்பதில்லை.கே.பரந்தாமன், மணிமுத்தாறு, திருநெல்வேலி. *அரிச்சந்திரன் போல யாரும் இருக்கிறார்களா... அவர்கள் ஏன் வெளியே தெரிவதில்லை?தர்மம், நீதியை விட்டு விலகிச் செல்லும் கலியுகத்தில் இப்போது நாம் வாழ்கிறோம். இதனால் நல்லவர்கள் தங்களை வெளிப்படுத்துவதில்லை. ர.முத்துராஜா, வாடிப்பட்டி, மதுரை.*பெண்கள் தலைவிரி கோலமாக கோயிலுக்கு செல்லலாமாசெல்லக் கூடாது. தலைவிரி கோலம் என்பது அமங்கலம். பெண்கள் தலைவாரி, பூச்சூட்டி, குங்குமம் இடுவது அவசியம். எம்.சம்பத், ராமாபுரம், சென்னை.*சண்டிகேஸ்வரர் சன்னதியை மட்டும் வலம் வரலாமா?கூடாது. சண்டிகேஸ்வரரை தரிசித்து விட்டு, அதே வழியே திரும்பி வந்து பிரகாரத்தை வலம் வருவதே சரியானது.ஜெ.சுபலட்சுமி, நெலமங்கலா, பெங்களூரு.*பரிகாரத்திற்காக ஈர ஆடையுடன் அரசமரத்தைச் சுற்றி வருகிறேன். சரிதானா...சுற்ற வேண்டாம். வழிபாடு உட்பட எந்த நல்ல விஷயத்திலும் ஈர ஆடை உடுத்தக் கூடாது.எம்.பிரசன்னா, அவிநாசி, கோயம்புத்துார். *மனிதர்களிடம் அன்பு குறைந்து வருகிறதே...வருந்த வேண்டிய விஷயம் இது. அன்பு இல்லாவிட்டால் மனம் பாலைவனம் போலாகி விடும். 'அன்பே தெய்வம்; அன்பே சிவம்' என போற்றுவதில் இருந்து இதன் பெருமையை உணரலாம்.கே.குணசீலன், சாந்தினி சவுக், டில்லி. *காம்பவுண்டு வீட்டில் குடியிருப்போர் சிலர் சரியாக தண்ணீர் வராததால் சாபமிடுகிறார்கள். வீட்டு உரிமையாளரை அது பாதிக்குமா?அதர்மம் செய்தால் சாபம் பலிக்கும். குடியிருப்போருக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பது வீட்டு உரிமையாளரின் கடமை.