உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

வி.ஜெயசுதா, வடக்கிபாளையம் கோயம்புத்துார்.*பெருந்தன்மையுடன் வாழ்வது எப்படி?போட்டி பொறாமையின்றி இருத்தல் நமக்கானது நம்மை வந்தடையும் என நம்புதல் பணம், புகழ், பதவிக்காக அலையாதிருத்தல், அமைதி காத்தல் இவற்றை பின்பற்றினால் போதும். எல்.ஸ்ரீராம், வடமதுரை திண்டுக்கல். *சிவகீதை என்னும் நுால் இருப்பது உண்மையா...பத்ம புராணத்தில் 16 அத்தியாயங்களில் 760 பாடல்களை கொண்டது சிவகீதை. ராமருக்கு உபதேசித்தவர் சிவபெருமான். எம்.கண்ணன், மேலுார், மதுரை.*திருவிழாவின் போது கொடித்தடை என்கிறார்களே...திருவிழாவுக்கு முன்பாக கோயிலில் காப்புக் கட்டுவர். இதன்பின் வெளியூர் செல்வதை தவிர்த்து வீதியுலா வரும் சுவாமியை தினமும் தரிசிக்க வேண்டும். இதை காப்புத்தடை அல்லது கொடித்தடை என்பார்கள். ஆர்.பார்கவி, கும்மிடிப்பூண்டி திருவள்ளூர்.*கர்ப்ப கிரக வாசலில் துவார பாலகர் இருப்பது ஏன்?கடவுள் ஒருவரே என்பதை உணர்த்தும் விதத்தில் சன்னதியின் வலப்புறம் உள்ளவர் ஆள்காட்டி விரலை நீட்டியபடி இருப்பார். இடப்புறம் உள்ளவர் சன்னதிக்குள் செல்ல அனுமதிக்கும் விதமாக கைகாட்டியபடி நிற்பார். கே.சங்கரி, ஜனக்புரி, டில்லி.*திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதன் நோக்கம் என்ன?உலக நலனுக்காக கோயில்களில் அன்றாட விழாக்கால பூஜைகள் சரிவர நடப்பது அவசியம். இதற்கு உதவி புரியும் கட்டளைதாரர்களுக்கு மரியாதையுடன் பிரசாதம் அளிப்பதே பரிவட்டம்.சி.பிருந்தா, சென்னபட்னா பெங்களூரு.*வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிடுவது ஏன்?வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிட்டால் வீட்டுக்குள் தெய்வீக சக்தி வரும். இது கிருமி நாசினியும் கூட. பி.கஜேந்திரன், பண்ருட்டி கடலுார். *காலையில் விழித்ததும் உள்ளங்கையைப் பார்ப்பது நல்லதாமே...தேவியரான பார்வதி லட்சுமி, சரஸ்வதி மூவரும் நம் உள்ளங்கைகளில் இருக்கின்றனர். காலையில் விழித்ததும் இவர்களை முதலில் நினைத்தால் நல்லதாக அமையும்.வி.கவுரிபிரசாத் களியக்காவிளை கன்னியாகுமரி. *யாரிடம் எல்லாம் இரக்கப்பட வேண்டும்?பெற்றோர், மனைவி குழந்தைகள், முதியவர்கள் நோயாளிகள், ஆதவற்றோர் பசுக்களிடம் இரக்கப்படுவது அவசியம்.கே.நந்தினி, வள்ளியூர் திருநெல்வேலி. *பள்ளிப்படை கோயில் என்றால் என்ன?போரில் வீரமரணம் அடைந்த மன்னர், தளபதி படைவீரர்களின் நினைவாக கட்டப்படுவது பள்ளிப்படை கோயில்.