உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எம்.அகிலா, குஜிலியம்பாறை, திண்டுக்கல்.*பெண்கள் மனஉறுதியுடன் வாழ வழிகாட்டுங்கள். பெண்களுக்கு மனஉறுதி அதிகம். இதை நீங்கள் உணர்ந்தால் போதும். தினமும் ஐந்து நிமிடம் கண்களை மூடி, இஷ்டதெய்வத்தை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.கே.இந்துமதி, தோரணஹள்ளி, மைசூரு.*தோப்புக்கரணம் இடுவது அவசியமா...விநாயகர் வழிபாட்டில் தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடுவது அவசியம். இதனால் புத்தியில் கூர்மை, தடை இல்லாத வெற்றி கிடைக்கும். கே.காசிநாதன், இளையான்குடி, சிவகங்கை.*காசிக்கு நிகரான கோயில்களைச் சொல்லுங்கள்.திருவெண்காடு திருவெண்காட்டீசர், திருவையாறு ஐயாறப்பர், மயிலாடுதுறை மாயூரநாதர், திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி, சாயாவனம் சாயாவனேஸ்வரர், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதேஸ்வரர் கோயில்கள் காசிக்கு நிகரானவை.ஆர்.காளையப்பன், வால்பாறை, கோயம்புத்துார்.*மூலவர் சிலை போலவே உற்ஸவர் சிலையும் இருக்கணுமா?ஆம். சிவனுக்கு மட்டும் மூலவர் சிவலிங்கமாகவும், உற்ஸவர் சோமாஸ்கந்தராகவும் இருக்கும். (சிவன், பார்வதி, நடுவில் முருகன் இருப்பது) மற்ற தெய்வங்களுக்கு இரண்டும் ஒன்றாக அமைந்திருக்கும். சி.ஜெயந்தி, தாமல், காஞ்சிபுரம்.*திருஷ்டி போக்க பரிகாரம் சொல்லுங்கள். பைரவருக்கு அர்ச்சனை செய்த கருப்புக்கயிறை வலது கையில் கட்டுங்கள். வீட்டு வாசலில் கள்ளிச்செடியை கட்டுங்கள். கே.பாலச்சந்தர், கீர்த்திநகர், டில்லி.*விளம்பரம் இல்லாத தர்மம், விளம்பரத்துடன் தர்மம் - பலன்கள் மாறுமா?விளம்பரம் இல்லாத தர்மம் ஆபத்தை போக்கும். உயிர் காக்கும். புண்ணியம் சேர்க்கும். விளம்பரத்துடன் செய்யும் தர்மம் புகழைச் சேர்க்கும். பி.மனோகரன், குறிஞ்சிப்பாடி, கடலுார்.*கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுகளில் நடத்தலாம்?பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் கட்டாயம் நடத்த வேண்டும். ஆர்.மைதிலி, நாரணம்மாள்புரம், திருநெல்வேலி.*பிரம்ம உபதேசம், உபநயனம் என்றால்...சீடனுக்கு பூணுால் அணிவித்து காயத்ரி மந்திரத்தை குருநாதர் உபதேசிப்பது பிரம்ம உபதேசம். வேதங்களை கற்றுக் கொடுக்க தம்முடன் அழைத்துச் செல்வது உபநயனம். எஸ்.சுவாதி, திருவிதாங்கோடு, கன்னியாகுமரி.*நிலை வாசலில் தெய்வம் குடியிருக்குமாமே...நிலை வாசலின் மேல்புறம் மகாலட்சுமி, வலதுபுறம் கங்கை, இடதுபுறம் யமுனை, அடியில் காவல் தெய்வங்கள் குடியிருக்கின்றனர். இதனால் அதை மிதிக்கவோ, அருகில் படுக்கவோ கூடாது. தினமும் காலையில் சுத்தப்படுத்தி கோலமிடுவது நல்லது.