உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எம்.விக்னேஷ், கிள்ளியூர், கன்னியாகுமரி. *அதிர்ஷ்டம், யோகம் இரண்டும் ஒன்றா...எதிர்பாராமல் கிடைப்பது அதிர்ஷ்டம். உழைப்பின் மூலம் கூடுதலாக பலன் கிடைப்பது யோகம். பி.ராம்குமார், குருவித்துறை, மதுரை. *ஆனி மாதம் கடைசி நாளில் இரட்டைக்குழந்தை பிறந்தால் நல்லதா?மாதம், தேதியைக் கொண்டு பலன் ஏற்படுவதில்லை. பிறந்த நேரத்திலுள்ள கிரக நிலை மூலம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். வி.பவித்ரா, முக்கூடல், திருநெல்வேலி.*பெற்றோர் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை நிறைவேற்றவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சேர்ந்து நிறைவேற்றுங்கள். பெற்றோரின் ஆசியும், தெய்வத்தின் அருளும் கிடைக்கும். பி.ராஜேஷ், திருத்தணி, திருவள்ளூர்.*பழங்காலத்தில் வேல் வழிபாடு இருந்ததா?சங்க காலத்திலேயே வேல் வழிபாடு இருந்தது. ஆர்.ஓவியா, வத்தலக்குண்டு, திண்டுக்கல்.*மகாலட்சுமியுடன் பிறந்தவளா ஜேஷ்டாதேவி?ஜேஷ்டா என்பதற்கு 'மூத்தவள்' என்பது பொருள். பாற்கடலைக் கடைந்த போது மகாலட்சுமிக்கு முன்னதாக இவள் தோன்றினாள். ஆர்.சவுந்தர், ஜனக்புரி, டில்லி.*பெரியவர்கள் தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டலாமா?“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்'' என்கிறது குறள். பெரியவர்கள் மட்டுமின்றி ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது அவசியம். இல்லாவிட்டால் எதிரிகள் இல்லாமலேயே தானாகவே அழிவர். எம்.வேதா, மதுராந்தகம், செங்கல்பட்டு. *மவுனம், மோனம் விளக்கம் தேவை. பேசாமல் இருப்பது மவுனம். ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை அடக்குவது மோனம். பி.அமுதா, லாஸ்பேட்டை, புதுச்சேரி.*பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன?இரண்டு கிரகங்கள் அவரவருக்குரிய ராசியை விட்டு விட்டு மாறி அமர்ந்தால் 'கிரகப் பரிவர்த்தனை' ஏற்படும். உதாரணமாக சூரியனின் வீடு சிம்மம். சந்திரனின் வீடு கடகம். சூரியன் கடகத்திலும், சந்திரன் சிம்மத்திலும் அமர்ந்தால் இந்த யோகம் ஏற்படும்.எஸ்.காயத்ரி, ஒசகோட்டே, பெங்களூரு.*தன்னைத்தானே புகழ்ந்தால் என்ன நடக்கும்?தற்புகழ்ச்சியால் சுயசிந்தனையை இழப்பீர்கள். அவரைச் சுற்றி பொய்யான மனிதர்கள் மட்டுமே இருப்பர். வி.மாலதி, மேட்டுப்பாளையம், கோயம்புத்துார்.*திதியன்று வாசல் தெளித்து கோலமிடலாமா?வாசல் தெளித்து செம்மண் மட்டும் இடுங்கள். மாலையில் கோலமிடுங்கள்.