உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

ஆர்.வித்யா, சக்குர்பூர், டில்லி.*காக்காவுக்கு சோறிடுவதால் பலனுண்டா...சனீஸ்வரர் வாகனமாகவும், முன்னோர் வடிவமாகவும் இருப்பது காக்கை. இதற்கு சோறிட்டால் சனீஸ்வரர் அருளும், முன்னோர் ஆசியும் கிடைக்கும். கே.கவிதா, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.*கன்யாதானம், அன்னதானம் சிறந்தது எது?இவற்றை விட கல்வி தானம் சிறந்தது. 'அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என மகாகவி பாரதியார் பாடியுள்ளார். வி.மனோன்மணி, துடியலுார், கோயம்புத்துார்.*ஆடிமாதம் அம்மனுக்கு உகந்தது ஏன்?ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாதம் தட்சிணாயன புண்ணிய காலம். அம்மனுக்குரிய ஆடிப்பூரம், நவராத்திரி, பாவை நோன்பு இதில் இடம்பெறுகின்றன. ஆடியில் தான் அம்மன் அவதரித்தாள், ஆர்.ஆர்த்தி, திசையன்விளை, திருநெல்வேலி.*புனித நதியில் நீராடும்போது சொல்லும் மந்திரம் எது?கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி !நர்மதா ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு !!கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை மனதால் நினைத்து நீராடுகிறேன். இவை என்னை புனிதமாக்கட்டும்.எம்.சந்தான கிருஷ்ணன், மதுராந்தகம், செங்கல்பட்டு.*சிலர் ரகசியத்தைக் காப்பாற்றுவதில்லையே... இயல்பான பேச்சு, வெளிப்படையான குணம் கொண்டவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியாது. கே.முருகன், தேவனஹள்ளி, பெங்களூரு.*கடவுள் மீது செய்த சத்தியத்தை மீறினால்…சத்தியத்தை மீறினால் அதற்கான தண்டனை உண்டு. ஆனால் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் கடவுளின் கருணை கிடைக்கும். பி.ரவி, பழநி, திண்டுக்கல்.*வழிபாட்டில் தேங்காய்க்கு முதலிடம் ஏன்?தெய்வீகமானதும், சிவனைப் போல் மூன்று கண்கள் கொண்டது தேங்காய். அதனால் அதற்கு முதலிடம் தருகிறோம். எம்.நிரஞ்சன், அலங்காநல்லுார், மதுரை.*சாஸ்திரத்தை மீறினால்...சாஸ்திரத்தை மீறினால் தீங்கு உண்டாகும். இதனால் வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவர். ஜி.மாரியப்பன், பெண்ணாடம், கடலுார்.*காற்றை மட்டுமே சுவாசித்து வாழ முடியுமா?நம்மால் அப்படி வாழ முடியாது. சித்தர்களால் மட்டுமே முடியும். ஆர்.கமலா, பள்ளியாடி, கன்னியாகுமரி.*மந்திரங்களை தவறாக உச்சரித்தால்...மந்திரங்களுக்கு உச்சரிப்பு முக்கியம். தவறினால் பலன் கிடைக்காது. முறையான பயிற்சி பெறுங்கள்.