உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

பி.ஆகாஷ், பிள்ளையார்பட்டி சிவகங்கை. *சம்பாதிப்பதில் சிலருக்கு அக்கறை இல்லையே...பணத்தின் அருமையை சிறுவயதில் கற்றுக் கொடுத்தால் தானாகவே சம்பாதிப்பதில் அக்கறை ஏற்படும். ஆர்.ஆனந்தி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.*நாரதர் பற்றிச் சொல்லுங்கள். மூன்று காலத்தையும் உணர்ந்த ஞானி. தீயவர்களை தோற்கடிப்பதில் வல்லவர். ஆணவம் மிக்க இரணியனை அவனது மகன் பிரகலாதன் மூலமாகவே அழித்தார். கருவிலேயே பிரகலாதனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். வி.கைலாஷ், சேரன்மகாதேவி, திருநெல்வேலி. *எதிர்பார்ப்பு இல்லாமல் வழிபாடு செய்தால்...இதை 'நிஷ்காம்ய பக்தி' என்பர். இது பாவத்தைப் போக்கும். மோட்சம் தரும். வி.விவேக், பணப்பாக்கம், கடலுார்.*சூரியனை வழிபட ஸ்லோகம் சொல்லுங்கள்ஜபாகு ஸும சங்காசம் காஸ்ய பேயம் மகாத்யுதிம்தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்பொருள்: செம்பருத்தி போல சிவந்த நிறம் கொண்டவரே! கஷ்யப முனிவரின் புத்திரரே! பாவங்களைச் சுட்டெரிப்பவரே! திவாகரனே! உம்மை வணங்குகிறேன். எல்.முருகதாஸ், உசிலம்பட்டி, மதுரை.*அருணகிரிநாதர் சன்னதி எங்கு உள்ளது?திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் கோயில் உள்ளது. முருகன் கோயில்களில் சன்னதி இருக்கும். ஆர்.சேதுராமன், சித்தாமூர், செங்கல்பட்டு.*ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பது ஏன்? மனிதனுக்கு அறிவு அவசியம் என்பதால் தினமும் நல்ல நுால்களைப் படிக்க வேண்டும். (ஓதாமல் - படிக்காமல்) எஸ்.ரம்யா, தில்சாத் கார்டன், டில்லி.*உறவினர்களின் குறையைப் பெரிதுபடுத்தினால்... குறையைப் பெரிதுபடுத்தினால் நிம்மதி போகும். எம்.கோபிகிருஷ்ணன், அடகனஹள்ளி, மைசூரு. *ஜுர தேவருக்கு மிளகு அன்னம் படைப்பது ஏன்ஜுரதேவருக்கு மிளகு அன்னம் படைத்தால் நோய்கள் தீரும். உடல்நிலை சீராகும். வி.பிரணவ், கிணத்துக்கடவு, கோயம்புத்துார்.*கொடிமரம் முன்புதான் விழுந்து வணங்க வேண்டுமா?ஆம். தெய்வீக சக்தி அனைத்தும் கொடிமரத்தின் அருகிலுள்ள பலிபீடத்தில் இருக்கும். எனவே தான் கொடிமரம் முன்பு விழுந்து வணங்குகிறோம். எல்.பூர்ணிமா, கணபதிபுரம், கன்னியாகுமரி. *இறப்பு போல பிறப்பிலும் தீட்டு உண்டா... தீட்டு உண்டு. குழந்தை பிறந்தால் சிலர் 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் கோயிலுக்கு செல்ல மாட்டார்கள்.