உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

கே.வனிதா, வசந்த்குஞ்ச், டில்லி.*சமய ஒற்றுமைக்கு விநாயகர் வழிவகுக்கிறாரா?சைவர்கள் கணபதி என்றும், வைணவர்கள் தும்பிக்கையாழ்வார் என்றும் வழிபடுவது சமய ஒற்றுமை தானே... மதம், மொழி, நாடு என்பதை கடந்து வழிபடும் தெய்வம் இவர். எம்.பூவண்ணன், அப்பாலத்தி, மைசூரு.*விநாயகர் பற்றிய புராணங்கள்...1. கச்சியப்ப முனிவர் எழுதிய விநாயக புராணம். 2. வடமொழியிலுள்ள முத்கல புராணம் சி.அருணாசலம், காட்டுகரணை, செங்கல்பட்டு.*ஒற்றைக் கொம்பன் என்பதன் பொருள்...எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது என வரம் பெற்ற கஜமுகாசுரனையும் தன் தந்தத்தை ஒடித்துக் கொன்றார். இதனால் இவரை 'ஒற்றைக் கொம்பன்' என அழைக்கிறோம். இந்த தந்தத்தை எழுத்தாணியாக்கி வியாசரின் மகாபாரதக்கதையை எழுதினார்.எல்.மகாதேவன், ஒட்டபிடாரம், துாத்துக்குடி. *கணநாதர் என அழைப்பது ஏன்?தடைகளைப் போக்கும் விநாயகரை தேவ கணங்களின் தலைவர் ஆக்கினார் சிவன். இதனால் 'கணநாதர்' என இவரை அழைக்கிறோம். ஆர்.கமலா, மேனாம்பேடு, சென்னை.*விநாயகருக்கு பிடித்த நைவேத்யங்கள்...கொழுக்கட்டை, எள்ளுருண்டை, பொரி, அவல், கரும்பு, சத்துமாவு, வாழைப்பழம், தேங்காய் ஆகியவை இவருக்கு பிடித்தவை.வி.சதீஷ், பாலப்பள்ளம், கன்னியாகுமரி. *விநாயகர் புராணம் படிப்பதால் பலனுண்டா?தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். ஐப்பசியில் விரதமிருந்து இலங்கைத் தமிழர்கள் இதை படிக்கிறார்கள். ஆர்.கணேஷ், திருமோகூர், மதுரை.*விநாயகர் வழிபட்ட சிவாலயம் எது?நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் விநாயகர் சிவபூஜை செய்து வழிபட்டார். கணபதீச்சரம் என்றும் இதற்கு பெயருண்டு. எம்.ஜெயச்சந்திரன், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல்.*அருகம்புல் சாத்துவது ஏன்?கஜமுகாசுரனை அழித்த விநாயகர் உக்கிரத்தில் இருந்தார். அருகம்புல்லால் அர்ச்சித்து நாரதர் அவரை குளிர்வித்தார். அருகம்புல் அர்ச்சனையால் செல்வம் பெருகும். பி.கிருத்திகா, தட்டான்சாவடி, புதுச்சேரி.*விநாயகருக்கு ஆகாத பூக்கள் யாவை?இவருக்கு ஆகாத பூக்கள் என எதுவுமில்லை. எருக்கு, வன்னி, அருகு போன்றவையாலும் அர்ச்சனை செய்யலாம். ஜி.வெங்கடேஷ், தளவாய்பாளையம், பொள்ளாச்சி.*விநாயகருக்குரிய ஸ்லோகம் ஒன்றை சொல்லுங்கள்.அகஜாநந பத்மார்க்கம் கஜானன மஹர்நிசம்!அநேக தந்தம் பக்தானாம்ஏகதந்தம் உபாஸ்மஹே!!தினமும் இதை மூன்று முறை சொல்லுங்கள்.