உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

வடிவுடை வாள் தடங்கண் உமை அஞ்சவோர் வாரணத்தைப்பொடியணி மேனி மூட வுரி கொண்டவன் புன்சடையான்கொடிநெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கிடமாஇடிபடு வானம் ஏத்த இருந்தானவன் எம்மிறையே.( ஞான சம்பந்தர் பாடல்)பொருள்: வாள் போல கூரிய விழிகளைக் கொண்டவள் பார்வதி. அவளே பயப்படும் விதத்தில், யானை வடிவ அசுரனைக் கொன்று தன் மேனியில் போர்த்திக் கொண்டவர் சிவன். உடம்பெங்கும் திருநீறு அணிந்தும், ஜடாமுடி தரித்தும் இருக்கும் அப்பெருமான் உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மழை வளம் மிக்க அந்த தலத்தில், தேவர்களும் வழிபட்டு பலன் அடைகின்றனர்.