உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்கமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.பொருள்: முருகப்பெருமானின் ஆறுமுகங்களும், வலிமைமிக்க பன்னிரு தோள்களும் வாழ்வாங்கு வாழட்டும். மலையை இருகூறாக்கும் சிறந்த வேலாயுதம் நிலைக்கட்டும். சேவல்கொடியும், பவனிவரும் மயிலும் நிலைத்து விளங்கட்டும். தெய்வானையும், மாறுபாடு இல்லாத வள்ளியும் நீடூழி வாழட்டும். பெருமைமிக்க அடியார்கள் என்றும் நிலை பெற்று வாழ்வார்களாக.