மனப்பாடப்பகுதி
UPDATED : ஜன 20, 2019 | ADDED : ஜன 20, 2019
இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறித்திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயேபரகருணைப் பெருவாழ்வே பரசிவ தத்துவ ஞானாஅரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.பொருள்: சிவன் பெற்ற நல்ல பிள்ளையே! திருவண்ணாமலையில் வாழும் முருகனே! மேலான கருணையுடன் பெருவாழ்வு தருபவனே! சிவ தத்துவமான ஞானவடிவே! இரவும், பகலும் முத்தமிழால் உன் புகழ் பாடும் பாக்கியத்தையும், நிலையான உண்மையை அறியும் திருவருளையும் தருவாயாக.