மனப்பாடப்பகுதி
UPDATED : ஏப் 06, 2012 | ADDED : ஏப் 06, 2012
பள்ளமே படர்ச்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்கள்ளமே செய்கிலர் கருதிய கானப்பேர்உள்ளமே கோயிலா வுள்குமென் உள்ளமே.பொருள்: பூமிப் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த கங்கை வெள்ளத்தை ஜடாமுடியில் தாங்கியவர் சிவன். வெண்மையான நிலவைத் தலையில் சூடியவர். உள்ளமே கோயிலாகக் கொண்ட கபடம் அற்ற தூயவர்கள் வணங்கும் அப்பெருமான் கானப்பேர் (காளையார்கோவில்) என்னும் தலத்தில் வீற்றிருக்கிறான். அப்பெருமானை எப்போதும் என் உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.