உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகைஇடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரணழியகடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.பொருள்: குடந்தையில் (கும்பகோணம்) சயன கோலத்தில் இருப்பவரே! பன்றி உருவில் வந்து பூமிதேவியை காத்தவரே! எங்கள் தலைவரே! கடல் கடந்து இலங்கை சென்று பகைவர் கோட்டைகளை அழித்தவரே! உலகத்தை இரண்டு அடிகளால் அளந்தவரே! உன் திருப்பெயரான நாராயணா என்று சொல்லி வணங்குகிறேன்.