மனப்பாடப்பகுதி!
UPDATED : ஜூலை 28, 2015 | ADDED : ஜூலை 28, 2015
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்உண்டை கொண்ட ரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர்நண்டை உண்டு நாரை பேர வாளைபாய நீலமேஅண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தணீர் அரங்கமே!பொருள்: தலையில் மலர் சூடிய கூனியின் (கைகேயியின் தோழியான மந்தரை) கூன் நிமிரும் வகையில், வில்லால் அடித்து, மனதிற்குள் மகிழ்ந்தவன் ராமன். அப்பெருமான் நண்டு, நாரை, மீன்கள் துள்ளும் அழகுடையதும், நீர்வளமும், நெய்தல் மலர்கள் நிறைந்த வயல் வளமும் நிறைந்ததுமான ஸ்ரீரங்கத்தில் அருள்புரிகிறான். குறிப்பு: திருமழிசை ஆழ்வார் பாடல்.