மனப்பாடப்பகுதி!
UPDATED : செப் 29, 2015 | ADDED : செப் 29, 2015
யாவருமாய் யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய்,மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந்து உறையுமிடம்,மாவரும் திண்படைமன்னை வென்றி கொள்வார்மன்னு நாங்கைதேவரும் சென்றிறைஞ்சு பொழில் திருத்தேவனார் தொகையே.பொருள்: சிவன், பிரம்மா ஆகியோருக்கு மேலான முதல் மூர்த்தியாக திகழ்பவரே! நீயே இந்த உலகமாய் இருக்கிறாய். யாவரும் நீ! யாவையும் நீ! வேதங்களின் பொருளுமாக இருக்கிறாய். எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை வெற்றிகொள்ளும் மனதிடத்தை நீ தருகிறாய். சோலைகள் சூழ்ந்ததும், தேவர்களால் வணங்கப்படுவதுமான திருநாங்கூரில் உறையும் தெய்வமே! உன்னை வணங்குகிறேன்.குறிப்பு: திருமங்கையாழ்வார் பாசுரம்.