மனப்பாடப்பகுதி
UPDATED : அக் 07, 2015 | ADDED : அக் 07, 2015
அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சிஉயநின் திருவடியே சேர்வான்- நயநின்றநன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்சொல்மாலை கற்றேன் தொழுது.பொருள்: திருமாலே! துன்பம் தரும் தீவினைகள் என் அருகிலேயே இருப்பதால் பயம் உண்டாகிறது. வாழ்வில் நற்கதி பெறுவதற்காக, உன் திருவடியைச் சரணடைந்தேன். சொல், பொருள் நயம் மிக்க பாடல்களைப் பாடி இனி உன் திருவடியை வணங்குவேன். 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரம் ஜெபித்து வருவேன். குறிப்பு: பொய்கையாழ்வார் பாடிய பாடல்